MedDroid

முகப்பு › அனைத்து நோய்கள் › சிறுநீர் தொற்று (UTI)

சிறுநீர் தொற்று (UTI)

டாக்டர் சஞ்சய் அன்பு, MBBS அவர்களால் எழுதப்பட்டு மருத்துவ ரீதியாக மதிப்பாய்வு செய்யப்பட்டது

தமிழ் மொழிபெயர்ப்பு மதிப்பாய்வு: 2026-11-05

சிறுநீர்ப் பாதை தொற்று (UTI) என்பது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர் மண்டலத்தில் ஏற்படும் பொதுவான பாக்டீரியா தொற்று. இதை எளிதில் குணப்படுத்தலாம், ஆனால் சிறுநீரகங்களை (Kidney) அடைந்தால் தீவிரமாகலாம்.

சிறுநீர் தொற்று பற்றி MedDroid-இடம் கேளுங்கள் →

காரணங்கள் மற்றும் ஆபத்து

  • பாக்டீரியா (பெரும்பாலும் குடலிலிருந்து) சிறுநீர்ப் பாதைக்குள் நுழைதல்
  • உடல் அமைப்பின் காரணமாகப் பெண்களுக்கு அதிகம்
  • நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தல்
  • உடலில் நீர்ச்சத்து குறைவு
  • கேத்தீட்டர், கர்ப்பம் அல்லது சர்க்கரை நோய் (Diabetes) ஆபத்தை அதிகரிக்கும்

பொதுவான அறிகுறிகள்

பரிசோதனைகள் மற்றும் கண்டறிதல்

சிகிச்சை மற்றும் பராமரிப்பு

  • டாக்டர் பரிந்துரைத்தபடி ஆன்டிபயாடிக்
  • நிறைய தண்ணீர், நீராகாரம் குடித்தல்
  • அசௌகரியத்துக்கு வலி நிவாரணம்
  • முழு ஆன்டிபயாடிக் கோர்ஸையும் முடித்தல்
  • மீண்டும் வராமல் இருக்க போதுமான தண்ணீர் மற்றும் சுத்தம்

உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டியது எப்போது

  • காய்ச்சலுடன் முதுகு/விலாப் பக்க வலி மற்றும் வாந்தி — உடனே (சிறுநீரகத் தொற்றாக இருக்கலாம்)
  • சிறுநீரில் இரத்தம் அல்லது அறிகுறிகள் குறையாமை
  • கர்ப்ப காலத்தில், ஆண்களில், குழந்தைகளில் அல்லது சர்க்கரை நோயுடன் UTI
  • அடிக்கடி வரும் தொற்று — பரிசோதனை தேவை

இது நோயறிதல் அல்ல. MedDroid சிறுநீர் தொற்று பற்றிய பொதுவான தகவலை மட்டுமே தருகிறது. இது உங்களைப் பரிசோதிக்கவோ, நோயைக் கண்டறியவோ, மருந்து எழுதவோ முடியாது. எப்போதும் தகுதியான மருத்துவரிடம் உறுதிப்படுத்துங்கள். அவசர நிலையில் உடனே உங்கள் உள்ளூர் அவசர எண்ணை அழையுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஆன்டிபயாடிக் இல்லாமல் UTI சரியாகுமா?

லேசானவை சில சமயம் நிறைய தண்ணீர் குடிப்பதால் சரியாகலாம், ஆனால் பெரும்பாலானவற்றுக்கு முழுமையாகக் குணமாகவும், தொற்று சிறுநீரகத்துக்குப் பரவாமல் தடுக்கவும் ஆன்டிபயாடிக் தேவை.

எனக்கு ஏன் அடிக்கடி UTI வருகிறது?

அடிக்கடி வரும் UTI-க்கு நீர்ச்சத்து, சுத்தம், ஹார்மோன்கள் அல்லது வேறு உடல்நிலைகள் காரணமாக இருக்கலாம். மீண்டும் மீண்டும் வரும் தொற்றுகளை டாக்டர் பரிசோதிக்க வேண்டும்.

English-ல் படிக்க · அனைத்து நோய்கள் · MedDroid